Friday, October 22, 2010

மலர் 1 இணைய மாதஇதழ் 2 11 செப் 2008

தலையங்கம்

வணக்கமும் அன்பும்
நண்பர்களின் வரவேற்புக்கு நன்றி

இந்தியாவின் இன்றைய சூடான விஷயம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம். அதிலுள்ள ஏகாதிபத்திய தன்மையை கம்யூனிஸ்டுகள் புட்டு புட்டு வைக்கின்றனர். அதற்கு சரியான பதில் காங்கிரஸிடம் இல்லை. ஒரே பதில் அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்குத் தேவை. ஏனெனில் இந்தியாவின் மின்சக்தி குறைபாட்டை நேர் செய்ய அணுசக்தியிலிருந்து மின்சாரம் எடுப்பது ஒன்றே வழி என்பதுதான்.

இதில் நமக்கு மாறுபாடு இல்லை.

ஆனால் காங்கிரஸிடம் நாம் கேட்பது அதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்க்கு அடிபணிந்து போவதைத் தவிர வேறு வழிகளை ஏன் யோசித்து முயற்சித்துப் பார்க்கக் கூடாது கம்யூனிஸ்டுகளிடம் நாம் கேட்கும் கேள்வி இந்த ஏகாதிபத்திய கோஷத்தோடு நின்றுவிடாமல் என்றைக்கு நீங்கள் ஆக்க பூர்வமாக செயல்படப் போகிறீர்கள்? ஏன் நீங்களே அதற்கு மாற்று யோசனைகளை, திட்டத்தை, செயல்வடிவத்தை தயாரிக்கக் கூடாது? ஏன் நீங்கள் விஞ்ஞானிகள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்கள் ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கக் கூடாது.

அதை விடுத்து குறைகளை கூறி ஓட்டு கேட்பது ஒன்றே அரசியல் செயல்பாடு என்று இருப்பது வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் போட்டியே.

இன்று இந்தியாவின் ஒவ்வொரு கட்சியிடமும் பல்லாயிரம் கோடி செல்வம் மக்களிடமிருந்து கொள்ளையடித்தது இருக்கிறது. கம்யூனிஸ்டுகளிடமும் இருக்கிறது.

ஆகவே அரசாங்கத்தைத் தாண்டி நல்ல செயல்களை, திட்டங்களை முன்னிறுத்தி செயல்படுத்த எதிர்கட்சிகள் இறங்க வேண்டும். அதுதான் ஆக்கபூர்வமாக இருக்கும்.

2. நான் பார்த்த, நான் அனுபவப் பட்ட உணர்வுகளில் இந்தியர்களாய நமக்கு உள்ள ஓரு தவறான உணர்வு நமது அடிமைத்தனமும் மூட நம்பிக்கையும் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் நமது அடிமைத்தனத்தின் மூலத்தை ஆராய்ந்தால் அதன் அடித்தளமாக இருப்பது நமது கடவுள் நம்பிக்கை.

விவரம் தெரியாத நாளிலேயே கடவுளை நம்புவதன் மூலம், கடவுளுக்கு பயபடுவதன் மூலம் ஒரு குழந்தை அடிமையாகிப் போகிறான். அந்த அடிமைத்தனத்தின் சுகத்தை, அது கொடுக்கும் பொறுப்பற்ற தனத்தை, சோம்பேறி தனத்தை அனுபவித்து பழகிவிடுகிறான். பின்னால் வளர வளர அந்த குழந்தையின் தாய், தந்தை, ஆசிரியர், அரசியல் தலைவன், பூசாரி என அனைவரும் அவனிடம் கேட்பதும் இந்த அடிமைத்தனத்தையே. யாரும் அவனுக்கு சுதந்திரம் கொடுக்கவோ, பொறுப்பு கொடுக்கவோ, தவறு செய்ய வாய்ப்பளிக்கவோ, ஆராய்ச்சி செய்து பார்க்க வாய்ப்புக் கொடுக்கவோ தயாரில்லை.

இந்த சமூக சூழலில் இந்தியன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதோ, விஞ்ஞானி ஆவதோ, புதுமைகள் படைப்பதோ எப்படிசாத்தியம்
சுதந்திரமற்ற செடிகளும், கொடிகளும், பறவையும், மிருகமும் எப்படி இயல்பிழந்து, சத்துகுன்றி, இயந்திரதனமாய் இருக்கிறதோ அப்படித்தான் சுதந்திரம் கொடுக்கபடாமல் மூடநம்பிக்கையில் வளரும் நமது சமூகமும் இருக்கிறது.

3.மனவளக் கலை.

மனதை வளப்படுத்தும் கலை. இப்படி ஓரு இயக்கம் செயல்படுவதற்க்கு நாம் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. ஆனால் இதை ஆன்மீகம் என்று விற்பது பச்சை துரோகம்.

ஆன்மீகம் என்பது ரமண மகரிஷி சொல்வது போல,

"மனவுரு மாய மன்னுமார் யோகி
தனக்கோர் செயலிலை உந்தீபற
தன்னியல் சார்ந்தனன் உந்தீபற"

மனம் அழிந்து தன்னியல்பு நிலையில் நிற்பது. தன் என்பது தானான நிலை . தான் என்ற தமிழ்சொல்தான் த்யான் என்று சமஸ்கிருதத்தில் உள்ளது. ஆகவே தியானம் என்பது தானாயிருப்பது என்பதே. மேலும் ரமணர் சொல்கிறார்.

"மனதின் உருவை மறவாது வாச
மனமென ஒன்றிலை உந்தீபற
மார்க்கம் நேர்ஆர்க்கும் இது உந்தீபற."

இப்படி சொல்வதுதான் ஆன்மீகம். மனிதனின் சிறிதளவே உள்ள தன்னுணர்வை வளர்த்து அவனை முழூ தன்னுணர்வு நிலைக்கு கொண்டு செல்வதே ஆன்மீகம். தன்னுணர்வற்ற சேகரிப்புக் குவியலை பெட்ரோலாகக் கொண்டு செயல்படும் ஒரு இயக்கமே மனம். இப்படியிருக்கையில் மனவளக் கலை மிகப் பெரிய ஆன்மீக இயக்கமாம். மனிதனின் சிந்தனைக்கு என்ன நேர்ந்தது தைரியமாக, சுயமாக சிந்திக்கும் நேர்மை கூட மனிதனிடமிருந்து பறிபோய் விட்டது என்றால் இந்த சமூகத்தை நாகரீகமடைந்தது, வளர்ந்தது, விஞ்ஞான பூர்வமானது என்று எப்படிச் சொல்வது?

அன்பு
சித்.


ஓஷோவின் வீடியோ


OSHO: God is not a Solution - but a Problem
http://www.youtube.com/watch?v=hhjOnYbKJJw





OSHO: The Compulsion to Reach Power and Prestige
http://www.youtube.com/watch?v=nZ6eTcL4iGg






OSHO: Your morality is not real
http://www.youtube.com/watch?v=T_LNh_eeh6Q






கேள்வி பதில் பகுதி

கடந்த முறை வந்த கேள்விகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓரு கேள்வி

தந்த்ரா என்றால் என்ன ?

நீ எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள் என தந்த்ரா கூறுகிறது.
இதுதான் அடிப்படை குறிப்பு. முழுமையான ஏற்றுக்கொள்ளுதல்.
முழுமையான ஏற்றுக்கொள்ளுதலின் மூலம் மட்டுமே நீ
வளர முடியும். பிறகு உன்னிடம் இருக்கும் எல்லா சக்திகளையும்
பயன்படுத்து. அவற்றை எவ்வாறு பயள்படுத்த முடியும்?
அவைகளை ஏற்றுக்கொள். பிறகு அவை என்ன என்று
கண்டுபிடி. காமம் என்றால் என்ன? அப்படி என்றால் என்ன ? -
நமக்கு அதனுடன் பழக்கமில்லை. நமக்கு காமத்தைப் பற்றி
நிறைய விஷயங்கள் தெரியும். அவை மற்றவர்களால்
கற்றுக் கொடுக்கப் பட்டவை. நாம் காம செய்கையை செய்திருக்கலாம்.
ஆனால் ஒரு குற்றவுணர்வுள்ள மனதோடு, அதனை அமுக்கி வைக்கும்
உணர்வோடு, பரபரப்பாக அவசரஅவசரமாக செய்திருப்போம். இந்த சுமையை குறைக்க ஏதோ ஒன்று செய்யப்பட வேண்டும். காம செய்கை
அன்போடு நம்மால் செய்யப்படும் செயல் அல்ல. நீ அதில்
மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் அதை உன்னால்
விட முடியாது. நீ மேலும் மேலும் அதை விட முயற்சி
செய்தால் அந்த அளவிற்க்கு ஈர்ப்பு உள்ளதாக அது மாறுகிறது.
நீ அதை ஒதுக்க முயற்சிக்கும் அளவிற்க்கு அது உனக்கு
அழைப்பு விடுப்பதாக நீ உணருகிறாய்.

நீ அதனை ஒதுக்க முடியாது. அதனை ஒதுக்க, அழிக்க முயலும்
இந்த நோக்கம் அதைப் பற்றி விழிப்பு கொள்ளும் விழிப்புணர்வை,
மனதை அழிக்கிறது. எது இதனை புரிந்து கொள்ளுமோ அந்த
நுண்ணுணர்வையே அழிக்கிறது. எனவே காமம் நுண்ணுணர்வு
இன்றியே நடக்கிறது. பிறகு நீ அதனை புரிந்துகொள்ள முடியாது.
ஓரு ஆழ்ந்த நுண்ணுணர்வு மட்டுமே எதையும் புரிந்து கொள்ள
இயலும். ஒரு ஆழ்ந்த உணர்வு – ஆழ்ந்து அதனுள் செல்லுதல்
மூலம் மட்டுமே எதனையும் புரிந்து கொள்ள முடியும்.

நீ ஒரு கவிஞன் மலர்களிடையே செல்வதை போல சென்றால்
மட்டுமே அப்படி சென்றால் மட்டுமே நீ காமத்தை புரிந்துகொள்ளமுடியும்.
நீ மலர்களை குறித்து குற்ற உணர்வு கொண்டால், நீ ஒரு சோலையை
கடந்து செல்லலாம், ஆனால் நீ கண்களை மூடிக்கொண்டு சோலையை
கடப்பாய். நீ அப்போது ஒரு அவசரத்தில், பைத்தியக்காரத்தனமான பரபரப்பில் இருப்பாய். எப்படியாவது சோலையை விட்டு வெளியேற துடிப்பாய். பிறகு நீ எப்படி விழிப்புணர்வோடு இருக்கமுடியும்

எனவே நீ எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள் என தந்த்ரா கூறுகிறது.
நீ பல பரிமாணங்கள் உள்ள, பல சக்திகளின் ஓரு சிறந்த புதிர். ஏற்றுக்கொள்.
ஆழ்ந்த நுண்ணுணர்வுடன், விழிப்புணர்வுடன், அன்புடன், புரிந்து கொள்ளுதலோடு எல்லா சக்திகளோடும் செல்.
அதனுடன் செல் பிறகு எல்லா ஆசைகளும் அதனை கடப்பதற்க்கு ஓரு வாகனமாக மாறி விடுகிறது.
பிறகு எல்லா சக்திகளும் ஓரு உதவியாக மாறி விடுகின்றன.
பிறகு இந்த உலகமே நிர்வாணா.
இந்த உடலே ஓரு கோவில்.
ஓரு புனித கோவில்.
ஓரு புனித இடம்..

SOURCE: VIGYAN BHAIRAV TANTRA VOL.1 CHAPTER-2

கவிதைப் பகுதி

அதிசய இடம்

அன்பு.........

அது கருவறை சுகம்,
ஒருமையின் ஆனந்தம்,
நிறைவின் வெளிப்பாடு,
இதயத்தின் வாழ்க்கை.

ஆம்..........அது அதிசய இடம்............

அங்கு உன் சோகங்களை கொட்டலாம்,
சுகங்களாக மாறும்,
அங்கு உன் புண்களைக் காட்டலாம்,
தழும்பற்ற நலம் கிடைக்கும்,
அங்கு உன் கோபம் வெளிப்படலாம்,
சாந்தம் பின்தொடரும்,
அங்கு உன் பொறாமை பேராசை வெறுப்பு இப்படி....
எல்லா அழுக்குகளும் அதிசயமாய் அனுமதிக்கபடும்,
ஆச்சரியமாய் தீர்ந்துபோகும்,
அங்கு உன் தவறுகள் தவறுகளல்ல
நடைபழகும் குளறுபடிகள்,
ஆகவே ஆனந்த ரசிப்பாய் இருக்கும்.

அங்கு.......நீ கடலுக்கடியில் இருக்கும் மனிதன்.....
அன்புக் கடலுக்கடியில்................................
இந்த வெளிஉலகம் உன்னை பாதிப்பதில்லை,
வெளிக்காற்று உன்மீது படுவதில்லை,
பார்ப்பதெல்லாம்.......அழகு பரவசம் சத்தியம்.

கடவுள்தன்மையின் கதை - ஓஷோவின் கதை - 2

எனக்கு ஒரு அழகான கதை நினைவுக்கு வருகிறது. ஒருவன் பக்கத்து வீட்டுகாரர்கள் அனைவருக்கும் ஒரே தொந்தரவாக இருந்தான் ஏனெனில் அவன் தொடர்ந்து கடவுளை எதிர்த்து, சொர்க்கத்தை எதிர்த்து, நரகத்தை எதிர்த்து வாதித்துகொண்டேயிருந்தான். அவன் ஒரு நாத்திகன் முழு நாத்திகன். அந்த எல்லைக்கு உட்பட்ட அரசன் கூட அவனைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் அரசவைக்கு அழைக்கப்பட்டான். அரசவையில் இருந்த அறிஞர்களால் கூட அவனை ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை.

உண்மையில் ஒரு நாத்திகனை ஒப்புக்கொள்ள வைப்பது என்பது கிட்டதட்ட முடியாத காரியம். நீ என்னைப்போல ஒரு மனிதனைக் கண்டுப்பிடிக்காவிட்டால், நாத்திகன் உன்னுடைய வாதங்கள் அனைத்தையும் அழித்துவிடுவான். ஏனெனில் நீ நம்பும் கடவுளைப் பற்றி வாதம் புரிகிறாய். நீ எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. நீ கண்ணால் பார்த்த சாட்சியை காட்டமுடியாது, நீ ஆதாரபூர்வமான வாதம் எதையும் கூறமுடியாது. கடவுளைக் குறித்த எல்லா வாதங்களும் நூற்றாண்டுகளாக நாத்திகர்களால் உடைத்து தூக்கி எறியபட்டே வருகிறது.

அந்த அரசன் மேலும் ஒரே ஒரு வாய்ப்பு கொடு. எனக்கு ஓரு மனிதரை தெரியும்.......அவர் மட்டுமே இந்த விஷயத்தைக் குறித்து ஏதாவது செய்யமுடியும் என்று அந்த நாத்திகனிடம் கேட்டான். அவர் இருக்கும் முகவரியை கொடுத்து நாத்திகனை அரசன் அந்த அடுத்த கிராமத்திற்கு போக சொன்னார். ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கோவிலில் அவரை நீ காண்பாய். அவருடைய பெயர் ஏக்நாத். அவர் ஓருவர்தான்........... அவர் உன்னை மாற்றினால்தான் உண்டு இல்லையெனில் உன்னை மாற்றுவது முடியாத காரியம் என அரசர் கூறினார்.

அதற்கு அந்த நாத்திகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இது ஒரு மிகப்பெரிய சவால். எனவே அவன் அந்த கிராமத்திற்கு சென்றான். நேரம் கிட்டதட்ட காலை ஒன்பது மணி இருக்கும். இந்த நேரத்தில் அவர் பூஜை மற்றும் குளியல் இவைகளை முடித்திருக்கவேண்டும் எனவே இதுதான் அங்கு செல்வதற்கு சரியான நேரம் என கூறிக்கொண்டு அவன் கோவிலுக்கு சென்றான். அங்கு அவனால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை, ஏக்நாத் தூங்கிகொண்டிருந்தார் – தூங்கிகொண்டிருப்பது மட்டுமில்லாமல் அவர் தனது கால்களை கடவுளின் சிலைமீது வைத்திருந்தார். அவர் கடவுளின் சிலையை கால்களை வைப்பதற்கு நல்ல இடமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

நாத்திகன் அவன் வாழ்விலேயே முதல்முறையாக, “கடவுளே நான் கூட கடவுளின் சிலைமீது கால் வைக்கமுடியாது நான் நாத்திகன் கடவுளை நம்புவதில்லை என்றாலும் கூட ஆனால் யாருக்கு தெரியும் முடிவில் கடவுள் இருந்துவிட்டால், எனவே என்னால்கூட இதை செய்ய இயலாது. இந்த மனிதர் ஒரு சந்நியாசி, அதிகாலையில் சூரியன் எழுவதற்கு முன் எழுந்திருக்க வேண்டியவர். இப்போது மணி ஒன்பது, அவர் தூங்கிகொண்டிருக்கிறார். இவர் கடவுளை குறித்து என்னை ஒப்புக்கொள்ள வைக்கப் போகிறாரா அவர் இன்னும் குளிக்கவில்லை, அவர் இன்னும் வழிபடவில்லை. அவர் வழிபடுவார் என எனக்கு தோன்றவில்லை – அவர் தனது கால்களை கடவுளின் சிலைமீது வைத்துள்ளார். இந்த மனிதர் ஆபத்தானவர் போல தெரிகிறது” என எண்ணியபடி பயத்துடன் நாத்திகன் கோவிலில் அமர்ந்து அவர் கண்விழிப்பதற்காக காத்திருந்தான்.

அரை மணிநேரம் கழித்து ஏக்நாத் எழுந்தார் மன்னித்துகொள், தூக்கத்தில் கால்களால் உன்னை தொட்டுவிட்டேன் என்று கூட கடவுளிடம் அவர் வேண்டவில்லை, அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

நாத்திகன், “நீங்கள் ஒரு சந்நியாசியா? வேதங்களில் சந்நியாசி என்பவன் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது அல்லவா?” என கேட்டான்.

ஏக்நாத், ஆமாம் கூறப்பட்டுள்ளது ஆனால் அதற்கான என்னுடைய புரிதல் என்னவென்றால் – ஒரு சந்நியாசி எழுந்திருக்கும் பொழுதெல்லாம் சூரியன் உதிக்க வேண்டும். யார் இந்த சூரியன்? அவன் என்னைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் நான் எதற்காக அவனைப் பற்றி கவலைப்படவேண்டும் எனக் கூறினார்.

ஆச்சரியமாக உள்ளது, ஆனால் நீங்கள் உங்களுடைய காலை கடவுளின் மீது, கடவுளின் தலையில் - என நாத்திகன் கேட்டான். நான் வேறு எங்கு என் காலை வைத்துக்கொள்ளமுடியும் -ஏனெனில் வேதங்கள் கூறுகின்றன கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் நீ நான் காலை எந்த இடத்திலும் வைக்ககூடாது என கூற வருகிறாயா என ஏக்நாத் கேட்டார்.

கோபப்படாதீர்கள் ஆனால் உங்கள் வாதம் நியாயமானதாக உள்ளது கடவுள் எல்லா இடத்திலும் இருப்பாரானால், நீங்கள் எப்போது எந்த இடத்தில் காலை வைத்தாலும் அது கடவுளின் தலை மீதே உள்ளது என நாத்திகன் கூறினான்.

எனவே என்ன பிரச்சனை? இது என் கால்களுக்கு நன்கு ஓய்வளிக்கிறது. சில முட்டாள்கள் இதுதான் கடவுள் என நினைக்கிறார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் உள்ளார் – எனவே அவர் எவ்வாறு இந்த கல்லில் மனிதனால் உருவாக்கபட்ட இந்த கல்லில் மட்டும் இருக்கமுடியும் நீ என்னை முட்டாளாக்கமுடியாது, என ஏக்நாத் கூறினார்.

அதிகாலையில் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதற்க்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் நான் வேறொரு கிராமத்திலிருந்து வருகிறேன். என்னை மன்னர் அனுப்பினார் உங்களிடம் என்ன சொல்வது என்று எனக்கு குழப்பமாக உள்ளது. ஏனெனில் நான் ஒரு நாத்திகனாக இருந்தேன்.

ஆனால் இந்த மனிதனோ இதுவரை அவன் பார்த்த மனிதர்களிலேயே பெரிய நாத்திகராக இருக்கிறார்.

மிகவும் நல்லது. நீ நாத்திகனாக இருக்கலாம். அதில் தவறேதும் இல்லை. அதைப் பற்றி கடவுள் பொருட்படுத்துவதில்லை. என்னை நம்பு. இப்போது போய்விடு என ஏக்நாத் கூறினார்.

ஆனால் மன்னர் எனக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார். நான் கடவுளை ஒப்புகொள்ள வைக்கப் படுவதற்காக வந்துள்ளேன் என நாத்திகன் கூறினான்.

கடவுளை ஒப்பு கொள்ள வைக்கபடுவதற்காகவா? கடவுளிடம் உனக்கு என்ன வேலை? என ஏக்நாத் கேட்டார்.

இல்லை, எந்த வேலையுமில்லை, என அவன் கூறினான்.
பிறகு உபயோகமில்லாத விஷயங்களை பற்றி ஏன் கவலைப்படுகிறாய். உபயோகமாய் ஏதாவது செய். நான் இப்போது போகிறேன். ஏனெனில் இது எனது சாப்பாட்டு நேரம் என ஏக்நாத் கூறினார்.

நீங்கள் ஆற்றில் குளிக்க போவதில்லையா என நாத்திகன் கேட்டான்.

ஆற்றைப் பற்றி யார் கவலைபடுவார்கள். அது எப்போதும் அங்கேயே உள்ளது.. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குளிக்கலாம். நடு ராத்திரியில், மத்தியானத்தில் – என்ன அவசரம் அது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இன்று சாப்பாடு போடுகிறேன் என்று சொன்ன வீட்டிற்க்கு நான் சரியான நேரத்திற்க்கு செல்லா விடில் அது கஷ்டமாகி விடும். எனவே நான் என் உணவை சாப்பிட்ட பிறகு குளிப்பேன் - என ஏக்நாத் கூறினார்.

ஆனால் குளிக்காமல் வழிபடாமல் உணவை உண்ணும் சந்நியாசிகள் பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை என நாத்திகன் கூறினான்.

நீ பழைய சந்நியாசிகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய். நான் இந்த காலத்து மனிதன். என்னுடைய நேரத்தை வீணடிக்காதே. நீ குளித்து விட்டு வழிபாடு செய். நான் எனது உணவுடன் வருகிறேன் என ஏக்நாத் கூறினார்.

உணவு தருவதாக வாக்களித்திருந்த அந்த யாரோ ஒருவர் உணவை இங்கேயே கொண்டு வந்துவிட்டார். உடனே ஏக்நாத் கோவிலின் முன் சாப்பிட அமர்ந்தார். அப்போது ஒரு நாய் ஓடிவந்து அவருடைய சப்பாத்திகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடியது. நாத்திகன் இதை கவனித்துக்கொண்டிருந்தான். உடனே ஏக்நாத் “முட்டாளே நில்!” என கத்திக் கொண்டே நாயின் பின் ஓடத் தொடங்கினார்.

கடவுளே அந்த சப்பாத்தியை இவர் திரும்ப வாங்கப் போகிறாரா என எண்ணிய படியே நாத்திகனும் பின் தொடர்ந்தான்.

ஏக்நாத் நாயை பிடித்து விட்டார். அவர் நாயிடம் “உனக்கு ஓரு சப்பாத்தி வேண்டுமென்றால் அங்கேயே காத்திரு என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். நான் உன்னை வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட அனுமதிக்க மாட்டேன்” என கூறிக்கொண்டே சப்பாத்தியை அதன் வாயிலிருந்து பிடுங்கி வெண்ணெயை அதில் தடவி சப்பாத்தியை திரும்ப கொடுத்தார். அவர் நாயை பார்த்து “ராம் ராம் இப்போது நீ இதை சாப்பிடலாம் ஆனால் எப்போதும் இங்கிதமாக நடந்து கொள்” எனக் கூறினார். நாத்திகன் இந்த முழு நிகழ்ச்சியையும் கவனித்தான். நாயை அவர் கடவுள் என அழைக்கிறார். அது மட்டுமின்றி வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட நாயை அனுமதிக்கவில்லை.......
ஒரு ஆச்சரியமான தனித்தன்மையுள்ள மனிதன். அரசர் சரியாகதான் கூறியுள்ளார் போலும். இந்த மனிதர் என்னை கடவுள் இருக்கிறார் என ஒப்புக்கொள்ள வைக்க முடிய வில்லை எனில் பிறகு வேறு யாராலும் முடியாது.

அவன் ஏக்நாத்தின் காலைத் தொட்டு வணங்கினான். என்னை மன்னித்துவிடுங்கள்.....நான் உங்களை மிகவும் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். இது கடவுளின் சிலை மீது காலை வைப்பதை நியாயபடுத்துதல் அல்ல. ஒரு நாயிடமும் நீங்கள் கடவுளை காண்கிறீர்கள். வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட நீங்கள் நாயை அனுமதிக்க மாட்டீர்கள். அதன் சப்பாத்தியில் வெண்ணெய் தடவுவதற்க்காக நீங்கள் அரை மைல் ஓடியிருக்கிறீர்கள். நானும் ஓடியிருக்கிறேன். என்றான்.

நான் வெண்ணெயோடு சப்பாத்தி சாப்பிடும் போது கடவுள் வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிடுவது சரியென்று எனக்கு படவில்லை. நான் அவனிடம் சொல்லியிருக்கிறேன் ஆனால் அவன் மிகவும் மடத்தனமான கடவுள். கிட்டதட்ட எல்லா நாட்களிலும் இது நடக்கிறது. நான் எனது உணவை திறக்கும்பொழுது அவன் எங்கேயோ மறைந்துள்ளான். நீ வேதங்களில் கண்டிப்பாக படித்திருப்பாய். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். இந்த கடவுள் எல்லா இடங்களிலும் எப்போதும் இருப்பார்.

ஆனால் நானும் பிடிவாதமான மனிதன். இன்று அரைமைல் மட்டுமே. ஓரு நாள் பத்து மைலாகிவிட்டது. ஆனால் வெண்ணெயை போட்டுத் தரும் வரை நான் அவனை சப்பாத்தி சாப்பிட அனுமதிக்க மாட்டேன். அது சரியானதாக எனக்கு பட வில்லை. ஒருவர் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் - என ஏக்நாத் கூறினார்.

அந்த மனிதன், “உண்மைதான், அதிகாலையில் இருந்தே உங்களுடைய மென்மையான நடத்தையை காண்கிறேன். மேலும் உங்களிடம் எனக்கு வாதம் செய்ய ஏதும் இல்லை, நான் வீட்டிற்க்கு ஒரு ஆத்திகனாக போகிறேன். ஏனெனில் என்னுடைய வாழ்வில்முதல் முறையாக ஒரு ஆத்திகரை காண்கிறேன். மற்ற எல்லா ஆத்திகர்களும் வெறும் வார்த்தைகளை உபயோகப்படுத்தினார்கள். கடவுளைப் பற்றி எதையும் அறிந்து கொள்ள வில்லை. உங்களுக்கு நிச்சயமாக ஏதோ ஒன்று தெரியும். ஒவ்வோர் அசைவும் அதை உணர்த்துகிறது. அது தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடும். நானும் முதலில் தவறாகத்தான் புரிந்து கொண்டேன். ஆனால் நான் இப்போது பார்க்கிறேன்” என கூறினான்.

இது எல்லாவற்றையும் மறந்து விடு. வந்து என்னோடு சாப்பிடு. நம் இருவருக்கும் போதுமான அளவு உணவு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனெனில் நீ இங்கு காத்துக் கொண்டிருப்பாய் என நான் அறிவேன் - என ஏக்நாத் கூறினார்.

அவன் “ஆனால் நான் குளிக்க வேண்டும்” என கூறினான்.

குளிப்பதை பற்றி மறந்து விடு. நான் உனக்கு கூறியதைப்போல ஆறு நாள் முழுவதும் ஓடி கொண்டேயிருக்கிறது. நீ எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். எந்த தடையும் இல்லை - என ஏக்நாத் கூறினார்.

ஆனால் நான்........ நாத்திகனாக இருந்திருந்தாலும் கூட நான்
கோவிலின் உள்ளே சென்று காலை தொட்டு ............. என அவன் கூறினான்.

நீ கோவிலுக்குள் சென்றால் என்னை விட மோசமான மனிதனை நீ பார்க்க மாட்டாய். முதலில் சாப்பிடு. பிறகு நீ என்ன முட்டாள்தனம் செய்ய நினைக்கிறாயோ அதை செய். எனக்கு பசியாக உள்ளது. என்னால் காத்திருக்க முடியாது. ஆனால் நீ என் விருந்தாளி – இந்த கோவில் என்னுடைய வீடு. நான் இங்கு வாழ தொடங்கியதிலிருந்து எல்லோரும் உள்ளே வருவதை நிறுத்தி விட்டார்கள். இது என் முழு வாழ்க்கையின் அனுபவம். எங்கு நான் சென்றாலும் எந்தக் கோவிலில் நான் நுழைந்தாலும்........ விரைவில் வழிபடுபவர்கள் மறைந்து விடுவர். ஏனெனில் கோவிலில் நான் எல்லாவிதமான காரியங்களையும் செய்வேன்....நீ அதிகம் பார்க்கவில்லை. நீ வந்து உன் உணவை எடுத்துகொள் - என ஏக்நாத் கூறினார்.

From “The Rebellious Spirit - Chapter 9”

No comments: